Branches - Chennai & Madurai

admin@baskaraastrology.in

+91 9688915219 and +91 9443475219

பாஸ்கரா

நவீன பாரம்பரிய ஜோதிட ரகசியம் என்ற நூலைப் பற்றிய விபரம்.

(லேட்) திரு கிருஷணமூர்த்தி அவர்கள் பாரம்பரிய ஜோதிடத்திலிருந்து மேலை நாட்டு பாவ கணித முறையை பயன்படுத்தி ஜாதக கணித முறையில் மாபெரும் புறட்சியை ஏற்படுத்தினார். ஆனால் பலன் கூறும் முறைக்கு பாரம்பரிய முறையில் கூறப்பட்ட கருத்தை அப்டியே எடுத்து உபநட்சத்திர முறைக்கு பயன்படுத்தினார். இது நடைமுறைக்கு ஏற்றதாக அமையவில்லை, கணிதம் மட்டும் நவீனப்படுத்தினார் ஆனால் பலன் கூறுவதில் மரபு முறையை பயன்படுத்திப் பார்த்தார் ஆனால் காலம் இட்ட கட்டளைபடி அவர் செய்ய வேண்டிய பணியை மட்டும் முடித்துச் சென்றார். ஆதனால் முழுமை பெறாமல் போனது.

அவர் விட்டுச் சென்ற இடத்திலிருந்து உபநட்சத்திரத்திற்கு பதிலாக பாவங்களுக்கு பாதசாரத்தை பயன்படுத்தி பாரம்பரிய ஜோதிடத்தை மேலும் செழுமைப் படுத்தியுள்ளேன்.

இந்நூல் பாரம்பரி ஜோதிட முறை தழுவிய விஞ்ஞான அடிப்படை கோட்பாட்டைக் கொண்டு அனைவரும் ஒரே மாதிரியான பலன் கூறும் வழிமுறை கொண்டது. ஓவ்வொரு ஜோதிட கருத்தும் காரண காரியங்களை விளக்கி, விம்சோத்தரி தசா புத்தியுடன் இணைத்து பலன் கூறும் வழிமுறை கொண்டது, தர்க்க ரீதியாக அனைவரும் ஏற்றுக் கொள்ளும் ஜோதிட முறை, இரண்டு மணி இடைவெளியில் பிறந்த அனைவருக்ககும் ஒரே ஜாதகத்தை வைத்து கூறப்பட்டு வந்த முறையை மாற்றி, சில நிமிடங்களில் பிறக்கும் இரட்டை குழந்தைக்கு இரு வேறுபட்ட புதிய ஜாதக கணித முறை, இரு வேறுபட்ட பலன் கூறும் வழிமுறை, இரு வேறுபட்ட தசாபுத்தி பலன் கூறும் புதியமுறை, இரு வேறுபட்ட கோச்சார பலன் கூறும் புதியமுறை கொண்ட, ஜோதிட வரலாற்றில் இதுவரை வெளிவராத ஜோதிட ரகசியங்கள் நிறைந்த புதிய மூல நூல் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்நூலில் ஜோதிடத்தின் அடிப்படை நியதிகள், புதிய ஜாதக கணித முறை மற்றும்

(1) நட்சத்திரத்தின் பலனை எப்படி தருகிறது,
(2) இருந்த இடத்தின் பலனை எப்படி தருகிறது,
(3) ஆதிபத்ய வீட்டின் பலனை எப்படி தருகிறது,
(4) நட்சத்திர அதிபயின் பலனை எப்படி தருகிறது,
(5) பார்வையின் பலனை எப்படி தருகிறது,
(6) கிரக சேர்க்கையின் பலனை எப்படி தருகிறது,
(7) ஆட்சி, உச்சம், நீசம், பகை, நட்பு இதன் உட்பொருள் யாரும் விளக்கப்பட்டதே இல்லை, புதிதாக விளக்கி இந்தப் பலனை எப்படி தருகிறது என்பதையும்,
(8) சந்திரன் நகர்வின் மூலம் பலனை எப்படி தருகிறது,
(9) அம்ஷத்தின் பலனை எப்படி தருகிறது,
(10) நவாம்ஷத்தின் பலனை எப்படி தருகிறது,
(11) சாரபலத்தின் பலம் எப்படி தருகிறது,
(12) பாவ பலத்தின் பலன் எப்படி தருகிறது,
(13) ஜோதிடத்தில் பயன்படுத்தும் பாதசாரம நான்கு விதமாக (சர்க்கியூட்) எப்படி செயல்படுகிறது என்பதைப் பற்றிய ஜோதிட நுனுக்கமான ரகசியங்கள் முழுமையாக அடங்கிய ஜோதிட வரலாற்றில் புதிய மூலநூல் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

Location - Chennai

Plot No - 248 , F-2,1st Floor,

Velan Nagar 3rd Street, Sridevikuppam

Valasaravakkam, Chennai - 600087


admin@baskaraastrology.in

+91 9688915219 and +91 9443475219

Location - Madurai

AIBEA Nagar, 'B' Colony

Near to Karpagam School, Paravai

Madurai - 625402


admin@baskaraastrology.in

+91 9688915219 and +91 9443475219

Follow Us

© baskaraastrology.in  |  Website - Designed and Developed by L2Apps