கிளைகள் - சென்னை | மதுரை | மலேசியா

admin@baskaraastrology.in

+91 9688915219 and +91 9443475219

பாஸ்கராவைப் பற்றி

"பிரசன்ன ஜோதிடமணி" மதுரை, திலக் கி.பாஸ்கரன் ஆகிய நான் 05.01.1964ஆம் நாள் காலை 03.59.25க்கு போடிநாயக்கனூரில் பிறந்து, உத்தமபாளையத்தில் வளர்ந்தவன்.புனித சூசையப்பர் நடுநிலைப் பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்றேன். பின் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வியைத் தொடர்ந்தேன். ஆனால், 10ஆம் வகுப்பு முழுமை பெறாமல் வெளியேறினேன். இளம் வயதில் பலதரப்பட்ட துறையில் பணி செய்தேன். எனது குடும்பத்தினர் செய்து வந்த பிரிண்டிங், பைண்டிங் வேலையும் செய்து வந்தேன். ஓவியத் துறையில் ஆர்வம் ஏற்பட்ட போது, உத்தமபாளையம் அருகில் உள்ள கோம்பை என்ற ஊரில் வசித்த (லேட்) திரு திருநாவுக்கரசு என்பவர், ஓவியம், கைரேகை, எண்கணிதம், படவிளக்கம், சாமுத்ரிகா லட்சணம் போன்றவற்றில் திறமை வாய்ந்தவர். எனக்கு ஓவியத்தில் ஆர்வம், எனது நண்பர் அப்துல் அஜீஸ் அவருக்கு கைரேகை எண்கணிதம், சாமுத்ரிகா லட்சணம், படவிளக்கம் போன்றவற்றில் ஆர்வம் உடையவர். நாங்கள் இருவரும் நெருங்கிப் பழகிய காரணத்தால், திரு திருநாவுக்கரசு அவர்கள் எனது நண்பரின் எலெக்ட்ரிக் கடைக்கு தினந்தோறும் வருவார். நான் கடையில் உள்ள கல்லாவில் அமர்ந்து வியாபாரத்தை கவனிப்பேன். எனக்குப் பின்னால் அமர்ந்து கொண்டு இருவரும் ஜோஸ்யம் சம்பந்தமாக பேசிக் கொண்டிருப்பார்கள். அதை தினந்தோரும் நானும் கவனித்துக் கொண்டிருப்பேன்.

திடீரென எனக்கு உத்தமபாளையத்தில் பலதரப்பட்ட பிரச்சினை ஏற்பட்டதன் காரணமாக 26.11.1982 அன்று அங்கிருந்து மதுரை சென்றேன். மதுரையில் உள்ள எனது மூத்த சகோதரி வீட்டில் வசித்துக் கொண்டு, எனது மாமாவுக்கு டூவீலர் ஒர்க்ஷாப்பில் உதவியாளனாக இருந்து கொண்டு, மதுரை முடக்குச் சாலையில் உள்ள டி.வி.எஸ் சுந்தரம் சூயிங் நீடில்ஸ் கம்பெனியில் உள்ள நூலகத்தில் தோல் பைண்டிங் வேலை செய்து கொடுத்து வந்தேன். அதோடு மதுரை கோச்சடையில் உள்ள பென்னர் இந்தியா வி.பெல்ட் கம்பெனியில், சென்னை குலோப் இந்தியா ஏஜென்ஸி மூலம் காவலர் பணியில் சேர்ந்தேன். அதன்பின், எனது மாமா சீ.ராஜேந்திரன் அவர்களும் நானும் சொந்தமாக ஒர்க்க்ஷாப் மற்றும் ஆர்ட்ஸ் கம்பெனி நடத்தி வந்தோம் ஓவியம் சார்ந்த அனைத்து வேலையிலும் தனித்தன்மையாக விளங்கினேன்.

அதோடு 1985 முதல் பல ஜோதிடர்கள் அறிமுகம் ஏற்பட்டது. ஜோதிடத் துறையில் ஆர்வம் ஏற்பட்டு பலதரப்பட்ட ஜோதிட முறை கற்றும் எனக்கு மனதிருப்தி ஏற்படாத காரணத்தால், கிருஷ்ணமூர்த்தி பத்ததி முறை கற்றேன், அதில் கணித முறை விஞ்ஞான ரீதியாக அமைந்ததை கண்டு ஆர்வமுடன் கற்று ஜோதிடப் பலன் கூறி வந்தேன். அதில் பல தோல்வியை சந்தித்து, கிருஷ்ணமூர்த்தி பத்ததி முறையில் நாம் கூறும் பலன் நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்றதாக அமையவில்லை என்பதை உணர்ந்து ஜோதிடத்தில் அவநம்பிக்கை ஏற்பட்டது. அதன் பின் பொருளாதார சூழ்நிலை சரியில்லாத காரணத்தால் பண நெருக்கடி கடன் பரச்சினையில் மாட்டிக் கொண்டார். சிறிது காலம் ஜோதிடத்தை விட்டு விலகியிருந்த போது சமூகச் சூழல் காரணமாக பலதரப்பட்ட இன்னலை சந்தித்தேன். எனது வாழ்கையில் ஏன் இப்படி இன்னல்கள் நடக்கின்றன, இதன் காரணமென்ன என்று விடை தேட மீண்டும் ஜோதிடத்தில் ஆய்வு மேற்கொண்டு பலதரப்பட்ட ஜோதிடரை அணுகிய போது ஜோதிடர்கள் கூறிய பலன் சரியாக நடைபெறாத காரணத்தை உணர்ந்தேன்.

அனைத்து ஜோதிடர்களும் என்ன தவறுகள் செய்கின்றனர் என்பதை அறிந்து அந்தத் தவறை நீக்கி ஜோதிடத்தை செழுமைப் படுத்த முற்பட்ட போது, ஜோதிடத்தை பயன்படுத்த முறையியல் ஒழுங்கு இல்லை என்பதை அறிந்து, ஜோதிடத்தை முதலில் முறைப்படுத்தி அதன் பின்தான் செழுமை படுத்த இயலும் என முடிவு செய்தேன். ஜோதிடத்தை முறைப்படுத்தும் பணியை செய்து கொண்டிருந்த போது, உத்தமபாயைம் அருகில் உள்ள கம்பம் என்ற ஊரில் வசித்த (லேட்) திரு ரத்தினம் பிள்ளை ஜோதிடர் அவர்கள் எனது தந்தையை காண எனது உத்தமபாளையம் வீட்டிற்கு 21.7.1985 காலை 11.10 மணிக்கு வந்தார். பாஸ்கரா ஜோதிடமுறை ஒன்று உருவாக முதலில் அடிக்கல் நாட்டிய பெருமைக்குரிய நபர் திரு ரத்தினம் பிள்ளை அவர்களை இயற்கை என்னிடம் அனுப்பி, என் மூலம் பாவமுனை உள்தொடார்பு எனும் புதிய ஜோதிடமுறை உருவாக்கத் தூண்டியது என்பதை இங்கு பதிவு செய்கின்றேன்.

ஜோதிடம் விஞ்ஞானமா? மெய்ஞானமா?
நமது முன்னோரால் ஜோதிடம் குருகுலக் கல்வி மூலம் வாய்வழிப் பாடமாக மட்டும் கற்றுத்தரப்பட்டது, மேலும் இதை ஆன்மீக பழக்க வழக்கமாக மாற்றி நடைமுறை வாழ்க்கையில் சடங்கு, சம்பிரதாயம், விழாக்கள், பூஜை, புனஸ்காரம் மேலும் சிலையாக, ஓவியமாக, வீட்டுக் கோலமாக, கதையாக, பழமொழியாக, விளையாட்டாக, விடுகதையாக மற்றும் பாடல்களாக நமது முன்னோர்களின் புதிய வைத்தியம் மற்றும் விஞ்ஞான கண்டுபிடிப்யையும் மக்களிடையே நடைமுறை பழக்கமாக மாற்றி, அதன் செயல்முறையை கோவில்களில் மறை பொருளாக பதிவு செய்துள்ளனர். இவை காலப் போக்கில் தெய்வீகம் கலந்த விஞ்ஞான ஜோதிடம் என அழைத்து முன்னோர்களின் அறிவுத் திறமையை பாதுகாக்கின்றனர். இதன் காரணமாக ஜோதிடத்தில் உள்ள விஞ்ஞான அடிப்படை மறைந்து மெய்ஞானமாக மாறிவிட்டது என்பது எனது கருத்தாகும். ஜோதிட விஞ்ஞானம் ஒரு நியதிக்கு அதாவது தர்கத்துக்கு உட்பட்டது. இந்த பிரபஞ்ச இயக்கமே ஒரு கட்டுப்பாட்டுடன் இயங்குகிறது, இதைத் தான் ஜோதிடத்தில் சூத்திரம் அல்லது விதிக்கு கட்டுப்பட்டு செயல்படுகிறது, இந்த இயக்க ஆற்றலை ஜோதிடத்தில் பயன்படுத்துகிறேன்.

விஞ்ஞான அடிப்படைக் கொள்கை என்ன, ஒரே கொள்கை அல்லது விதியை கொண்டு அனைவரும் ஒரே மாதிரி முடிவை கூறினால் தான் அறிவியல் என்கிறோம். இந்த விதி முறைகள் பாஸ்கரா ஜோதிட முறையில் மட்டும் அமைந்துள்ளது. இதில் 8 விதிகள், 8 விதிவிலக்கு மட்டும் பயன்படுத்தி பலன் கூறுவதால், அனைவரும் ஒரே மாதிரியான பலன் கூற இயலும். இதில் ஜாதி, மதம், இனம், ஆன்மீகம் போன்றவற்றை கடந்து விஞ்ஞான தத்துவார்த்த அடிப்படையில் ஜோதிடத்தை மட்டும் பிரித்து அமைத்துள்ளதால், அனைவரும் படித்து அவரவர் வாழ்க்கையை முன் கூட்டியே திட்டமிட்டு வாழ்கையில் தடம் புரளாமல் அவரவர் வாழ்க்கையை செழுமைப் படுத்திக் கொள்ள இயலும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜோதிடத்தில் உள்ள வேறுபாடு :
அனைத்து ஜோதிடரும் ராசிச் சக்கரத்தில் உள்ள கிரக நிலைகள் வைத்து, கிரகம் இருந்த இடத்திற்கு மட்டுமே பலன் கூறுகின்றனர். அப்படி அனைவருக்கும் கிரகம் இருந்த இடத்தின் பலன் நடைபெற்றதா? அல்லது நட்சத்திரத்தின் பலன் நடைபெற்றதா? என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. இதன் காரணமாக பல ஆய்வுகள் செய்த போது ஒரு குறிப்பிட்ட தேதியில் பிறந்த குழந்தைகள் அனைவருக்கும், சந்திரனைத் தவிர மற்ற கிரகங்கள் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. கிரகத்தை வைத்து ஜோதிடப் பலன் அனைவருக்கும் ஒரே கிரகநிலையை வைத்து எப்படி பலன் கூற இயலும். இப்படிப்பட்ட தடுமாற்றம் ஜோதிடர் அனைவருக்கும் உள்ளது, அதனால் அனைவரும் இதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் தனக்குத் தோன்றிய விசயத்தை அருள் வாக்காகத்தான் பலன் கூறுகின்றனர் என்பதை அறிந்தேன். நமது பாரம்பரிய ஜோதிடத்தில் வானவியல் அடிப்படையை மையமாக வைத்து நமது முன்னோர்களால் கணித்துக் கூறப்பட்ட கருத்து அனைத்தும் செவி வழியாக, நூல் வாயிலாகவும் நமக்கு கிடைத்த விஷயம் முழுமையாக கிடைத்துள்ளனவா? அல்லது முழுமையாக கிடைக்கவில்லையா? என்ற கேள்வி, பலதரப்பட்ட ஜோதிட முறையைப் படித்ததால் இந்த கேள்வி எனக்குள் எழுந்தது. இதன் அடிப்படையை மையமாக வைத்து ஆய்வு செய்த போது தான் நமது முன்னோர்கள் ஜோதிடத்தை பல உட்பிரிவாகப் பிரித்து அதையும் வகைப் படுத்தியுள்ளனர்.ஜோதிடம், ஜாதகம்,ஆரூடம், பிரசன்னம், நாடி போன்ற பல பிரிவாகப் பிரித்து ஆய்வு செய்துள்ளனர். மேற்கண்ட முறை பற்றிய விபரத்தை முதலில் அறிந்து கொள்வோம். பிறந்த நேரத்தை வைத்து ஜாதகம் கணிதம் செய்து அதன் மூலம் பலன்கள் கூறும் ஜோதிட முறை. இது ஆதி முதல் தொன்று தொட்டு அனைவரது பயன்பாட்டில் வளர்ந்து இன்றைய நவீன ஜோதிட முறை என வளர்ந்துவரும் ஜாதக பலன் கூறும் ஜோதிட முறையாக உள்ளது. இந்த முறையில் பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள அனைத்து விஷயத்தையும் ஆய்வு செய்யப் பயன்படுகிறது.

1. வாக்கிய ஜோதிடமுறை
2. திருக்கணித ஜோதிடமுறை
3. லகரி (மேல்நாட்டு) ஜோதிடமுறை
4. பி.வி.ராமன் ஜோதிடமுறை
5. கிருஷ்ணமூர்த்தி பத்ததி ஜோதிடமுறை
6. பாஸ்கரா ஜோதிடமுறை.

இந்த முறைகள் அனைத்தும் பிறந்த ஜாதகத்தை வைத்துப் பலன் கூறும் முறைகள். மேற்கண்ட 6 வகை ஜோதிட முறையும், கிரகங்கள் அமர்ந்த நிலை கொண்டு பலன் நிர்மானிக்கப்படுகிறது. ஜோதிடத்தில் மட்டும் நிலையான ஒரே ஜாதகச் சக்கரம் பயன்படுத்தி தசா புத்தி பலன் கூறப்படுகிறது. கோச்சாரம் பயன்படுத்தப்படுகிறது.

பிறந்த ஜாதகம் இல்லாத நபர்க்கு ஆரூடம் மற்றும் பிரசன்ன முறை பயன்படுத்திப் பலன் கூறுகின்றனர். இந்த முறை தற்கால கிரக நிலை கொண்டு பலன் நிர்ணயம் செய்யப்படுகின்றது. இந்த முறையில் அனைத்து விஷயத்தையும் கூற இயலாது, எதிர்பார்த்து வந்த கேள்விக்கு மட்டும் பலன் கூறப்படுகிறது. இதில் நிலையாக ஒரே ஜாதக சக்கரம் பயன்படுத்துவது இல்லை. தசா புத்தி பலன் பாஸ்கரா முறை தவிர பிற முறைகளில் பயன்படுத்துவதில்லை.
1. ஆரூடமுறை
2. பிரசன்னமுறை
3. ஜாமக்கோள் ஆரூடமுறை
4. நாடிமுறையில் பல முறைகள்
5. நட்டஜாதகம்
6. பிருகுநந்தி நாடிமுறை
7. ஜெய்மினி முறை
8. மீனா நாடிமுறை
9. தேவபிரசன்னம்
10. கிருஷ்ணமூர்த்தி ஆரூடமுறை
11. பாஸ்கரா பிரசன்னமுறையிலும் இது போன்ற ஆரூட முறைகள் பல உள்ளன.

கிராமங்களில்,கிரகநிலை மற்றும் ராசிச் சக்கரம் பயன்படுத்தாமல் பலன் கூறும் முறை. இது அவரவர் சுருதி, யுக்தி, அனுபவம் முதலியவை வைத்து மனதில் தோன்றும் கருத்தை வைத்து பலன் கூறுகின்றனர். இதை ஜோதிடம் என்று கூறி ஜோதிடத் துறைக்கு துரோகம் இழைத்து வருகின்றனர் என்பது வருத்தத்திற்கு உரியதாகும்.

1. அருள்வாக்கு ஜோஷ்யம்
2. சோழி முறை ஜோஷ்யம்
3. கிளி, எலி ஜோஷ்யம்
4. ஏடு ஜோஷ்யம்
5. மை ஜோஷ்யம்
6. யட்சினி ஜோஷ்யம்
7. வெற்றிலை ஜோஷ்யம்
8. முகக்குறி ஜோஷ்யம்
9. அங்கக்குறி ஜோஷ்யம்
10. தொடுகுறி ஜோஷ்யம்
11. எண் கணித ஜோஷ்யம்
12. கைரேகை ஜோஷ்யம்
13. சகுன ஜோஷ்யம்
14. சலன (சப்தம்) ஜோஷ்யம்
15. வர்ண (கலர்) ஜோஷ்யம்
16. பல்லி ஜோஷ்யம்
17. படவிளக்க ஜோஷ்யம்
18. மனோவசிய ஜோஷ்யம்
19. குறி மற்றும் கோடாங்கி ஜோஷ்யம்
20. ஆவி ஜோஷ்யம்
21. வாஸ்த்து ஜோஷ்யம்
22. மச்ச ஜோஷ்யம்
23. கனவு ஜோஷ்யம்.

இது போன்ற பலதரப்பட்ட ஜோதிட முறைகள் உள்ளன. இம்முறைகளால் உறுதியான பலன் கூற இயலாது. இந்த முறையில் சம்பவம் நடக்கும் காலத்தைக் கணக்கிட முடியாது. இது ஜோதிடத்திற்குச் சம்பந்தம் இல்லாத ஜோதிடம். இதைக் கல்லூரியில் ஜோதிடப் பாடத்திட்டமாக சேர்ப்பது சரிதானா, என்பதை ஜோதிடர்கள் சற்று சிந்திக்க வேண்டுகிறேன்.

பாஸ்கரா ஜோதிட முறை உருவாக முக்கிய காரணம் என்ன?

ஜோதிடத்தில் எனக்கிருந்த அதீத ஆர்வத்தின் காரணமாக பலதரப்பட்ட ஜோதிடரை அணுகி பலதரப்பட்ட ஜோதிட முறை கற்று, நானும் கற்ற முறையின் மூலமாக பலன் கூறிக் கொண்டிருந்தேன். நூல்களில் சொல்லப்பட்ட கருத்தை வைத்துப் பலன் கூறும் போது அதை வாடிக்கையாளர் சிலர் ஏற்றுக் கொள்கின்றனர், சிலர் ஏற்றுக் கொள்வதில்லை, ஏற்றுக் கொண்ட ஜாதகத்தை மற்ற ஜோதிடரிடம் கேட்டால் மாற்றிப் பலன் கூறுகின்றனர், நான் கூறிய பலனை வாடிக்கையாளர் ஏற்றுக் கொண்டார் எனக் கூறினால், உனக்கு வாக்குப் பலிதம் இருப்பதால் வாடிக்கையாளர் சரி என்று கூறுகின்றார் எனக் கூறி என்னை தட்டிக் கழித்தனர். வாக்குப் பலிதம் உள்ளது என்றால் ஜாதகம் எதற்கு என கேள்வி கேட்டால் முன்னோர் கூறியதை மட்டும் பயன்படுத்து, நடக்கவில்லை என்றால் அது அவரவர் கர்மா என்று கூறுகின்றனர். இவர்கள் கூறும் கருத்தை என்னால் ஏற்க முடியவில்லை. இதன் காரணமாக மற்றவரிடம் ஜோதிட ஆலோசனை கேட்பதால் எந்தப் பயனும் இல்லை என்பதை உணர்ந்து, நம்மால் முடிந்த வரை முயற்சி செய்வோம் என முடிவெடுத்து ஆய்வுகள் செய்தேன். பாரம்பரிய முறை மற்றும் கிருஷ்ணமூர்த்தி பத்ததி முறை இரண்டிலும் பலன் கூறுவதில் ஒரே நியதியை பயன்படுத்துகின்றனர். கிருஷ்ணமூர்த்தி பத்ததி மூலம் பாவத்தின் அடிப்படையில் கிரகங்கள் மாற்றம் அடைகின்றன என்பதை உணர்ந்தேன். திடீரென்று ஒருநாள்,அன்று சந்திரன், கன்னியில் அஸ்தம், தனது சொந்த நட்சத்திரத்தில 13.02.1990 அன்று மதியம் 1.00க்கு ஆரம்பம் ஆகிறது. அப்போது, எனக்கு புதிய சிந்தனை உதயமானது. நாம் கிரகத்திற்கு பாதசாரம் பார்க்கின்றோம். ஏன் பாவத்திற்கு பாதம் பார்க்கலாமே என சிந்தனை உருவானது. உடனே எனது ஜாதகத்தை பாவத்திற்கும் கிரகத்திற்கும் பாதசாரம் போட்டு ஜாதகத்தை ஆய்வு செய்தபோது, எனது வாழ்வில் நடந்தவை அனைத்தும் தெளிவாகப் புரிந்தது. அன்று முதல் இந்த முறையில் பாரம்பரியம் படித்த நபர்களிடம் ஜாதகப் பலன் கூறிய போது அனைவரும் வியப்புக்கு ஆளானார்கள். ஆனால் என்னால் தசை மற்றும் புத்திக்கு மட்டுமே பலன் கூற முடிந்ததது. இதன் காரணமாக, இந்த முறையை பயன்படுத்தும் போது திடீரென ஒரு நாள் பாவமுனை தொடர்பு சம்பந்தமான சிந்தனை உருவானது, இந்த உள்தொடர்பு முறையை ஆய்வு செய்தபோது துல்லியமான பலன் கிடைத்த காரணத்தால் பாதசாரம் பார்ப்பதைவிட, உபநட்சத்திர முறையில் ஆய்வு தொடர்ந்ததால். பாரம்பரிய முறையில் ஆர்வம் ஏற்படவில்லை. தற்போது பாவமுனை தொடர்பு முறை செழுமையான பின் எனது முறைக்கு பெயர் வைக்க முற்பட்டபோது எனது மாணவர்களின் கருத்துக்கிணங்க பாஸ்கரா ஜோதிடம் என்ற பெயரில் எனது தனித்தன்மையாக எனது கருத்தை நூல்களாக திலக் அஸ்ட்ரோ புக்ஸ் பதிப்பகம் மூலம் வெளியிட்டோம்.

ஜோதிட பயன்பாட்டின் முக்கியத்துவம் என்ன?.

ஜோதிட உலகில் பல நூற்றாண்டாக தொன்று தொட்டு ஜோதிடம் தோன்றிய ஆரம்ப காலத்திலிருந்து, நமது முன்னோர்களால் ஆய்வு செய்து கூறப்பட்ட ஜோதிட அடிப்படை கருத்தை யாரும் புரிந்து கொள்ளாமல், அதற்குப் பின் வந்தவர்கள், முறை தவறி ஆளுக்கு ஒரு ஜோதிடமுறை எனக்கூறி. பலதரப்பட்ட ஜோதிட முறை தோன்றியதால், ஜோதிடத்தின் அடிப்படை கருத்தை விட்டு விலகிச் சென்றதால், இது காலப் போக்கில் ஜோதிடம் குப்பை மேடாகிப் போனது. இந்த ஜோதிட அறிவியலை ஆன்மீகத்தோடு இணைத்து, தன்னை கடவுளாகவும், சிலர் கடவுளுக்கு ஏஜன்டாக கூறிக்கொண்டு, ஜோதிடத்தை கேலிக்கூத்தாகவும், நம்பகமற்றதாவும், முறைகேடாக்கி விட்டனர். ஜோதிடத்தில் பலதரப்பட்ட முறைகள் உருவாக அவசியமே இல்லை.

ஜோதிடத்தின் அடிப்படை கொள்கை என்ன..?

(1) ராசி மண்டலம் 360 பாகை கொண்டது.
(2) ராசி 30 பாகை இடைவெளி கொண்டது.
(3) நட்சத்திரம் 13.20 பாகை இடைவெளி கொண்டது.
(4) பாதம் 3.20 பாகை இடைவெளி கொண்டது
(5) நவாம்ஷம் 40..00 பாகை இடைவெளி கொண்டது
(6) ராசிகள் 12
(7) கிரகம் 9
(8) நட்சத்திரம் 27
(9) பாதம் 108
(10) அம்ஷம் 9
(11) தசை 9
(12) புத்தி 9
(13) அந்தரம் 9
(14) சூச்சுமம் 9
(15) பாவப் பார்வை 12
(16) கிரகப் பார்வை 9
(17) விதி சூத்திரம் 8
(18) விதி விலக்கு 8
(19) ஜாதக கணித முறைகள் மட்டும் காலத்திற்கு ஏற்ப மாற்றங்கள் நிகழும் ஆனால் அடிப்படை என்பது காலத்திற்கு ஏற்றார்போல் வளற்சி ஏற்பட வேண்டுமே தவிர தளர்ச்சியடைந்து காலத்தால் புறந்தள்ளக் கூடாது என்பது எனது வேண்டுகோள்.

நமது முன்னோர் கூறிய மேற்கண்ட கருத்தின் அடிப்படை விஷயங்கள் தற்போதுள்ள விபரங்கள் ஜோதிடர்களின் பயன்பாட்டுக்கும், தற்போதுள்ள காலச் சூழலுக்கு ஏற்ற விபரங்கள் தற்போதய ஜோதிடத்தில் இல்லை என்பது எனது தாழ்மையான கருத்து. முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் வானவியல் கணிதம் இருந்தது துல்லியமா?, விஞ்ஞான வளர்ச்சி இருந்தது, கருவிகள் இருந்ததா? என்பது கேள்விக்குறியாக அமைந்துள்ள போது சில வேறுபாடுகள், கருத்து முரண்பாடு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. நமக்கு கிடைத்த ஆதாரங்களை வைத்துதான் நாம் ஜோதிடத்தை வளர்த்தெடுக்க வேண்டும் என்பதே எனது ஆவல்.

இந்த அடிப்படை கருத்தை விட்டுவிட்டு யாரும் ஜோதிடத்தில் புதிதாக ஒன்றை உருவாக்க இயலாது. இந்த அடிப்படைகளை மேலும் செழுமைப் படுத்தலாம். இதன் மூலத்தை அறிந்தால் ஜோதிட ஆய்வாளரிடம் முற்போக்கான சிந்தனைகள் உருவாகும் ஜோதிடத்தில் வளர்ச்சியும் ஏற்படும் "எப்பொருள் யார் யார் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு", என்பதைப் போல ஜோதிடத்தில் யார் எந்த கருத்தைக் கூறினாலும் அதன் உண்மையான பொருள் அறிந்து கூறவேண்டும்.எமது 35 வருட ஆய்வின் மூலம் நமது முன்னோர் கூறிய ஜோதிட கருத்தை நன்கு ஆய்வுகள் செய்து, சுய பரிசோதனை செய்து நமது மரபு முறையான பாரம்பரிய ஜோதிடத்தை முன்னோர் கருத்து மாறாமல் செழுமைப் படுத்தி, நவீன விஞ்ஞான கணிதமான பிளசீடியஸ் பாவகணித முறையை நமது பாரம்பரிய ஜோதிட முறைக்கு ஏற்ப மாற்றி அமைத்து, பாத அடிப்படையில் கிரகத்தின் பாத சாரத்தை பாவத்தின் பாத முனையோடு இணைத்து பயன்படுத்தி பாஸ்கரா நவீன பாரம்பரிய ஜோதிடம் என அழைக்கின்றேன்.

இந்த முறை அனைவரும் ஒரே மாதிரியான பலன் கூறும் முறை, ஒரே லக்னத்தில் பிறந்த இரட்டை குழந்தைக்கு இரு வேறுபட்ட ஜாதக கணிதமுறை, இரு வேறுபட்ட தசாபுத்தி பலன், இரு வேறுபட்ட கோச்சார பலன் கூறும் நவீன ஜோதிட முறையை உருவாக்கியுள்ளேன். மேற்கண்ட இதே அடிப்படையை மையமாக வைத்து மேலும் துல்லியத்தை நோக்கி பாதசார அடிப்படையிலிருந்து, உபநட்சத்திரம் என்ற கோட்பாட்டை முன்னெடுத்து பாவமுனை உள்தொடர்பு முறையை உருவாக்கி பாஸ்கரா பாவமுனை உள்தொடர்பு என அழைக்கின்றேன். இந்த பாவமுனை உட்தொடர்பு முறையில் மேலும் துல்லியமாக அனைவரும் ஒரே மாதிரியான பலன் கூறும் முறை, ஒரே லக்னத்தில் பிறந்த இரட்டை குழந்தைக்கு இரு வேறுபட்ட ஜாதக கணிதமுறை, இரு வேறுபட்ட தசாபுத்தி பலன், இரு வேறுபட்ட கோச்சார பலன் கூறும் நவீன பாஸ்கரா பாவமுனை உள்தொடர்பு ஜோதிட முறையை உருவாக்கியுள்ளேன். இந்த முறையில் நவீன காலத்திற்கு ஏற்ற மணி, நாள், வாரம், மாதம், வருடம், நிலையான, நிலையற்ற அனைத்து கேள்விக்கும் முடிவான தெளிவான பலன் கூற இயலும் என்பதால் இது அடுத்த தலைமுறையினருக்குத் தெளிவான வழிகாட்டியாக அமையும்.

Location - Chennai

Plot No - 248 , F-2,1st Floor,

Velan Nagar 3rd Street, Sridevikuppam

Valasaravakkam, Chennai - 600087


admin@baskaraastrology.in

+91 9688915219 and +91 9443475219

Location - Madurai

AIBEA Nagar, 'B' Colony

Near to Karpagam School, Paravai

Madurai - 625402


admin@baskaraastrology.in

+91 9688915219 and +91 9443475219

Follow Us

© baskaraastrology.in  |  Website - Designed and Developed by L2Apps